முத்துக்குமார சுவாமி கோவிலில் காப்பு கட்டுடன் கந்தசஷ்டி விரதம் துவக்கம்
ADDED :1081 days ago
பல்லடம்: மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டுடன் கந்தசஷ்டி விரதத்தை துவக்கினர். அக்., 30 சூரசம்ஹாரம் எனப்படும் கந்த சஷ்டி விழா நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, பல்லடம் அடுத்த மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நேற்று காலை, 6 மணி முதல் 11 மணி வரை நடந்தது. இந்நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கந்தசஷ்டி விரதத்தை துவக்கினர். முன்னதாக, அமாவாசை, மற்றும் கந்த சஷ்டி விழா துவக்கம் காரணமாக, சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அக்., 30 அன்று மாலை, 6.30 மணிக்கு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியும், மறுநாள் காலை, 6 மணிக்கு மேல் திருக்கல்யாண விழாவும் நடக்க உள்ளதாக, கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.