காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் ஆந்திர துணை முதல்வர் தரிசனம்
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமை ஆந்திர மாநில துணை முதல்வரும் அறநிலைத்துறை அமைச்சருமான ஸ்ரீ கொட்டு. சத்ய நாராயணா அவர்கள் தன்னுடைய குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் விநாயகர் பெருமானை தரிசனம் செய்தவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் காணிப்பாக்கம் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி கோயில் நிர்வாக அதிகாரி ராணா பிரதாப் மற்றும் சித்தூர் தொகுதி எம்எல்ஏ ஜங்காலப் பள்ளி ஸ்ரீனிவாசலு கோயில் செயற்பொறியாளர் வெங்கட்நாராயணா துணை நிர்வாக அதிகாரி வித்யாசாகர் ரெட்டி மற்றும் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.