உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரகுனேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேக விழா

வரகுனேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேக விழா

சாலைகிராமம்: இளையான்குடி அருகே உள்ள சாலை கிராமத்தில் மிக பழமையான வரகுனேஸ்வரர் கோயிலில் கடந்த 48 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேக விழாவிற்காக கோயில் வளாகத்தில் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றன.பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியர்கள் ஊர்வலமாகமாக கொண்டு வந்து சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்தனர். ஊராட்சி தலைவர் தங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !