உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலையில் நாளை சூரசம்ஹாரம்: மலை மேல் வாகனங்கள் செல்ல தடை

மருதமலையில் நாளை சூரசம்ஹாரம்: மலை மேல் வாகனங்கள் செல்ல தடை

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை சூரசம்ஹாரம் நடப்பதையொட்டி, அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த, 26ம் தேதி, காப்பு கட்டுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நாளை, மாலை, 3:00 மணிக்கு மேல் நடக்கிறது. இந்நிலையில், சூரசம்ஹாரத்தன்று, நாள் முழுவதும், அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல், செல்ல அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருதமலை கோவில் துணை கமிஷனர் ஹர்ஷினி கூறுகையில்,‘ வரும், 30ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். எனவே, அப்போது, மலை மேல், போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில், வரும் ஞாயிற்றுக்கிழமை, அனைத்து வாகனங்களும் மலைக்கு மேல் செல்ல அனுமதி அளிக்க கூடாது என, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை, சூரசம்ஹாரத்தை ஒட்டி, அடிவாரத்தில் இருந்து, காலை, 6:00 மணி முதல் இரவு வரை, பைக், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மலைக்கு மேல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து பக்தர்களும், தேவஸ்தானம் சார்பில் இயக்கப்படும் பஸ்கள் மூலம், மலைக்கு மேல் உள்ள கோவிலுக்கு செல்லலாம்,‘என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !