பரமக்குடி முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா
ADDED :1346 days ago
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவையொட்டி, இன்று மாலை சூரசம்ஹார விழா நடக்கிறது. பரமக்குடி தரைப்பாலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி, இன்று காலை சிறப்பு அபிஷேகங்கள் நடந்து சக்திவேல் வாங்கும் விழா நடக்கிறது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு முருகன் மயில் வாகனத்தில் சக்தி வேலுடன் வீதி வலம் வருகிறார். பின்னர் இரவு 7:00 மணிக்கு வைகை ஆற்றங்கரையில் கோயில் முன்பு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. நாளை காலை 10:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.