தென்கரையில் சூரசம்ஹாரம்
ADDED :1441 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோயிலில் வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமி சன்னதி உள்ளது கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்கள் முன்னிலையில் நேற்று மாலை அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து சூரசம்ஹார விழா நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று (அக்.31) காலை 10:00 மணிக்கு சுவாமியின் அன்னப்பாவாடை தரிசனம், மாலை திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.