உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாயக்கனூரில் பிருந்தாவன மஹோற்சவ விழா

நாயக்கனூரில் பிருந்தாவன மஹோற்சவ விழா

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிருந்தாவன மஹோற்சவ விழா நடந்தது.நாயக்கனூரில் சுயம்பு லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில், 90ம் ஆண்டு பிருந்தாவன மஹோற்சவ விழா நடந்தது. காலை, 7:00 மணிக்கு திருமஞ்சன திருவாராதனம் நடந்தன. தொடர்ந்து, அலங்கார சேவைகள், தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இரவு, 9:00 மணி முதல் நள்ளிரவு வரை சந்தான வேணுகோபால சுவாமி பஜனை குழுவினரின் கிருஷ்ண லீலா, பிருந்தாவன நிகழ்ச்சி நடந்தது. இதில், பங்கேற்ற குழுவினர் கிருஷ்ண சரிதத்தை, பஜனை, பிருந்தாவன நடன நிகழ்ச்சிகளுடன் நடத்தினர். உள்ளூர் குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து, பக்தி நிகழ்ச்சிகளை நடத்தினர். அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், நாயக்கனூர் வட்டார சேர்ந்த பஜனை கோஷ்டியினர், பாகவத ஆண்டாள் கோஷ்டியினர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் பஜனை கோஷ்டியினர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !