உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் திருமடத்தில் நூல் வெளியீட்டு விழா

பேரூர் திருமடத்தில் நூல் வெளியீட்டு விழா

பேரூர்: பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், பேரூராதீன முருகன் வெண்பாமாலை என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது.  பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், முருகப்பெருமான் சூர்தடித்த பெருவிழாவையொட்டி, கடந்த, 25ம் தேதி முதல், தொடர்ந்து காலையும் மாலையும் முருகப்பெருமானுக்கு வேள்விகள் நடந்தது. ஆறாம் நாளான, நேற்றுமுன்தினம், முருகப்பெருமானுக்கு, பெருந்திருமஞ்சனம் நடந்தது. அதனைத்தொடர்ந்து பக்தர்களே, முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். அதன்பின், பேரூராதீன கல்லூரியின், சிதம்பர அடிகளார் நூலகத்தின் சார்பில், பேரூர் தமிழ் கல்லூரி தமிழ் துறை உதவிப் பேராசிரியர் நடராசு எழுதிய, பேரூராதீன முருகன் வெண்பாமாலை என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. இவ்விழாவில், பேரூராதீனம் மருதாச்சல அடிகளார் நூலை வெளியிட, ஜெர்மனியை சேர்ந்த கூடை பந்தாட்ட வீரர் கபில் நூலை பெற்று கொண்டார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !