உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி, திருத்தங்கல் கோயில்களில் கந்தசஷ்டி திருக்கல்யாணம்

சிவகாசி, திருத்தங்கல் கோயில்களில் கந்தசஷ்டி திருக்கல்யாணம்

சிவகாசி: சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் உள்ள கோயில்களில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. சிவகாசி கமல விநாயகர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல் சிவன் கோயில், சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், பேச்சியம்மன் கோயில், திருத்தங்கல் கருநெல்லி நாதர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !