உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் புனரமைக்க மெகா திட்டம் : அமைச்சர் தகவல்

ராமேஸ்வரம் கோயிலில் புனரமைக்க மெகா திட்டம் : அமைச்சர் தகவல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் திருக்கோயிலில் பக்தர்கள் வசதிக்கு புனரமைக்க மெகா திட்டம் தயாராக உள்ளது என ஹிந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த அமைச்சர் சேகர் பாபு, மழைநீர் தேங்கும் பிரகாரம், பக்தர்கள் நீராடும் வழித்தடம், அக்னி தீர்த்த கடற்கரை, பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருக்கும் பகுதியை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : உலகளவில் பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வருகின்றனர். இவர்களுக்கு வசதிகளை மேம்படுத்திட புனித நீராடும் வழித்தடம், கோயில் பிரகாரத்தில் மழை நீர் தேங்குதல், தரிசனத்திற்கு வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சிரமபடுதல், அக்னி தீர்த்த கடலில் கழிவு நீர் கலப்பதை தடுத்தல், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள 2ம் பிரகாரம் கட்டுமானம் உள்ளிட்ட பல பணிகளை புனரமைக்கவும், கோயிலில் புதிய உடை மாற்றும் அறை அமைக்க உள்ளிட்ட பல பணிக்கு மெகா திட்டம் தயாராக உள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளார். கோயிலுக்குள் தடுப்பு வேலிகளால் தட்சிணாமூர்த்தி சன்னதி, பிரகாரம் வலம் வர முடியாமல் பக்தர்கள் சிரமப்படுவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின்போது ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், கோயில் துணை ஆணையர் மாரியப்பன், பலர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !