திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானுக்கு சாந்தாபிஷேகம்
ADDED :1349 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி விழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சாந்தபிஷேகம் நடந்தது. உற்சவர் சுப்ரமணிய சுவாமி தெய்வானை கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினர். சுவாமி முன்பு தங்கம், வெள்ளி குடங்களில் புனித நீர் நிரப்பி பூஜை நடந்தது. பஞ்ச கவியம், 108 லிட்டர் பால், 108 இளநீர் உள்ளிட்ட பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க குடம் தெய்வானைக்கு வெள்ளி குடங்களிலிருந்த புனித நீர் அபிஷேகம் முடிந்து புஷ்ப அலங்காரமானது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.