ஓரிக்கையில் சந்திரமவுலீஸ்வரர் பூஜை: காஞ்சி சங்கராச்சாரியார்கள் பாதயாத்திரையாக வருகை
காஞ்சிபுரம்; சந்திரமவுலீஸ்வரர் பூஜையை தொடங்கி வைப்பதற்காக, காஞ்சி சங்கராச்சாரியார்கள் இருவர், சங்கர மடத்திலிருந்து பாதயாத்திரையாக ஓரிக்கை மணிமண்டபத்திற்கு எழுந்தருளினர்.
காஞ்சிபுரம் ஓரிக்கை மணி மண்டபத்தில், சந்திரமவுலீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற உள்ளன. இந்த வைபவத்தை முன்னிட்டு, இன்று காலை காஞ்சி சங்கர மடத்தில் இருந்து சங்கராச்சாரியார்கள் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகிய இருவரும், பாதயாத்திரையாக புறப்பட்டனர். மடத்திலிருந்து காஞ்சியின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று, ஓரிக்கையில் உள்ள மணி மண்டபத்தை வந்தடைந்தனர். பல இடங்களில் பக்தர்கள் சுவாமிகளின் பாதங்களை வணங்கி ஆசி பெற்றனர். மணி மண்டபத்தை அடைந்த சுவாமிகளுக்கு அங்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சந்திரமவுலீஸ்வரர் பூஜையை சுவாமிகள் தொடங்கி வைத்தனர். இந்த பூஜையில் காஞ்சிபுரம் மட்டுமின்றி, சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.