ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமி 20ல் திருப்பூர் விஜயம்
ADDED :12 hours ago
திருப்பூர்: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின், 70வது ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமி வரும், 20ம் தேதி திருப்பூர் விஜயம் செய்கிறார்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமி, வரும், 20ம் தேதி மாலை, 6:00 மணி முதல், 22ம் தேதி மதியம், 12:00 மணி வரை, திருப்பூரில் நடக்கும் பல்வேறுநிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆசியுரை வழங்குகிறார்.
தொடர்ந்து, திருப்பூர், பல்லடம் ரோடு, ஷெரீப் காலனியில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் திருப்பூர் கிளை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண பஜனை மடம் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.