உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி 2ம் நாள் விழா: ‘சக்தி’ கொலுவில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனை தரிசித்து பக்தர்கள் பரவசம்

வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி 2ம் நாள் விழா: ‘சக்தி’ கொலுவில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனை தரிசித்து பக்தர்கள் பரவசம்

சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலித்தார்.


வடபழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயிரில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டிற்கான விழா, கடந்த 11ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடக்கிறது.


இரண்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கொலுவை பார்த்து பரவசமடைந்து தரிசித்து சென்றனர். நாளை அன்னபூரணி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து  அபிராமி, கெஜலட்சுமி, கருமாரி, கம்பாநதி, சரஸ்வதி அம்மன், பரிவேட்டை அலங்காரம் செய்யப்படுகிறது. விழாவில் தினமும் காலை 11:00 முதல் 11:30 மணி வரையும், மாலை 6:00 முதல் 6:30 மணி வரையும், அம்மன் கொலு மண்டபத்தில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப்படும். தினமும் மாலை, 5:00 மணி முதல் 7:30 மணி வரை லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், மகளிர் குழுவினர் கொலுபாட்டு நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !