எல்லைகாளி கோவில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் தரிசனம்
கடலுார்: எல்லை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலுார், பழைய வண்டிப்பாளையம், எல்லைகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 10ம் தேதி தேவதா அனுக்ஞை, எஜமானார் சங்கல்பம், கணபதி ேஹாமம், லட்சுமி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், முதல் கால யாக சாலை பூஜை நடந்தது.
நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக சாலை பூஜை, மூன்றாம் கால யாக சாலை பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாக சாலை பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை நடந்தது. தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கும்பாபிஷேக குழுவினர், உபயதாரர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர். இக்கோவிலில் வரும் 24ம் தேதி செடல் உற்சவம் நடக்கிறது.