நெல்லிக்குப்பம் சிவலோகநாதர் கோவிலில் சரபேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு
ADDED :5 hours ago
நெல்லிக்குப்பம்: சிவலோகநாதர் கோவிலில் சரபேஸ்வரருக்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில், ஞானபார்வதி உடனுறை சிவலோகநாதர் கோவில் உள்ளது. இங்கு சரபேஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் சரபேஸ்வரரை வணங்கினால் கஷ்டங்கள் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இந்நிலையில், இன்று நந்தி பகவானுக்கு பிரதோஷ பூஜைகளும், 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகம் செய்து சரபேஸ்வரருக்கு சங்காபிஷேகமும், நடந்தது. மேலும், நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஒரே இடத்தில் நின்று நந்தி,சரபேஸ்வரருக்கு நடந்த பூஜைகளை பக்தர்கள் தரசித்தனர். நந்தி மற்றும் சரபேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.