ஜோதி பாலமுருகன் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :1113 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரம் ஜோதி பாலமுருகன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. கந்த சஷ்டி திருவிழாவை கடந்த, 25ம் தேதி முதல் தினசரி அபிஷேக பூஜை, அலங்கார பூஜைகள் காலை, மாலை நடந்தன. நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி, முருகனுக்கு இளநீர், பால், திருநீறு, சந்தனம், திருமஞ்சன அபிஷேக நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர், பாலமுருகன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.