கட்டேறிபட்டி கோயிலில் 29ம் தேதி மகா மண்டபம் திறப்பு!
ADDED :4795 days ago
ஆழ்வார்குறிச்சி: கட்டேறிபட்டி ஸ்ரீமன் ராமசாமி கோயிலில் வரும் 29ம் தேதி மகா மண்டபம் திறப்பு விழா நடக்கிறது.கட்டேறிபட்டியில் உள்ள ஸ்ரீமன் ராமசாமி கோயிலில் புதியதாக மகா மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சிகள் வரும் 29ம் தேதி காலை நடக்கிறது. கணபதி ஹோமம், சிறப்பு ஆராதனை, விசேஷ பூஜைகளுடன் காலை 9.50 மணி முதல் 11.30 மணிக்குள் மகா மண்டபம் திறப்பு விழா நடக்கிறது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை கட்டேறிபட்டி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.