சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் ஐப்பசி நவமி வழிபாடு
ADDED :1074 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் ஐப்பசி மாத வளர்பிறை நவமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. பூரணை புட்கலை உடனான சேவுகப்பெருமாள் ஐயனார், பிடாரி அம்மன், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.