காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் பஞ்சபூத தலங்களில் வாயு தளமாகவும் , ராகு - கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் பக்தர்களால் கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 35 நாட்களில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள உண்டியல்களில் செலுத்துவது வழக்கம் .அவ்வகையில் கடந்த 28/9/2022 முதல் 2 .11 .2022 வரை 35 நாட்களில் பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தப்பட்ட காணிக்கை பணம், தங்க நகை மற்றும் வெள்ளியை கணக்கிடும் பணியை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. சீனிவாசலு முன்னிலையில் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தலைமையில் அதிகாரிகள் ஊழியர்கள் கணக்கிடப்பட்டது அதில் பணமாக ஒரு கோடியே 81 லட்சத்து 22 ஆயிரத்து 449 ரூபாயும் , தங்கம் 85 கிராம் வெள்ளி 543 கிலோ மற்றும் வெளிநாட்டு பணம் 152 டாலர்கள் இருந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டது.