கடையம் தங்கம்மன் கோயில் கொடை விழா
ADDED :1139 days ago
கடையம்: கடையம் தங்கம்மன் கோயிலில் விழா நடந்தது. கடையத்தில் யாதவர், தேவர் ஆகிய இரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட தங்கம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில்
கொடை விழா நடந்தது. விழா அன்று, காலையில் பாபநாசத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், கிரக குடம், பால்குடம் மற்றும் அலகுகுத்தி ஊர்வலம், ஜம்புநதியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மதிய கொடை, மாலை முளைப்பாரி ஊர்வலம், இரவு சிறப்பு அபிஷேகம், சாமகொடை, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 2ம் நாள் காலை முளைப்பாரி ஆற்றில் கரைத்தல், அம்பாளுக்கு சிறப்புபூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.