உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் புட்டுத்திருவிழா

பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் புட்டுத்திருவிழா

பழநி: புட்டுத் திருவிழாவை முன்னிட்டு பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து சிவன், பார்வதி, விநாயகர், சண்டிகேஸ்வரர் வையாபுரி கண்மாய் ஐந்து கண் பாலத்தில் உள்ள பாதிரி விநாயகர் கோயிலில் எழுந்தருளினர். ஆறு கலசங்கள் வை த்து சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. வையாபுரி கண்மாயில் இருந்து மண் வெட்டி எடுக்கப்பட்டு, சிவன் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி நடந்தது.  தங்க குதிரை வாகனத்தில் சிவன் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !