அகரம் முத்தாலம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது
ADDED :1073 days ago
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழா கடந்த 17 ஆம் தேதி நடந்தது. கோயில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நேற்று நடந்தது. திண்டுக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ், அகரம் முத்தாலம்மன் கோயில் நிர்வாக அறங்காவலர் சு.ம.மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் ரூ.10 லட்சத்து 3846 கிடைத்தது. மேலும் தங்கம் 17.5 கிராம், வெள்ளி ஆயிரத்து 176 கிராம் கிடைத்தது,