ஸ்ரீரங்கம் கோயிலுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கிய பக்தர்
ADDED :1149 days ago
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு, சென்னையை சேர்ந்த பக்தர் திரு எஸ் .ஜெகநாதன் - திருமதி உஷா ஜெகநாதன் தம்பதியினர் அன்னதான கூடத்திற்கு ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை உபயமாக கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்துவிடம் இன்று (5ம்தேதி) வழங்கினார். முன்னதாக அர்ச்சகர் சுந்தர்பட்டர் சிறப்பு பூஜை செய்தார்.