உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே எலகம்பாளையத்தில், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஐப்பசி மாத கிருத்திகை விழா விமர்சையாக நடந்தது. காலையில் நடை திறந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு திரவியங்களால் மூலவருக்கு அபிஷேகமும், அதை தொடர்ந்து அலங்கார பூஜையும் நடந்தது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பகத்தூர் முப்பெரும் தேவியர் பஜனை குழு சார்பில், பஜனை பாடப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !