நீலமங்கலம் மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை
ADDED :1143 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை நடந்தது. அதனையொட்டி, நேற்று மாலை மாரியம்மன், மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்திற்கு பின் தீபாராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் வழிபட்டனர்.