திருநங்கைகள் சொந்த காலில் நின்று உழைக்க பால்பண்ணை: தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் ஊக்கம்
தஞ்சாவூர், திருநங்கைகளின் வாழ்க்கைத்தரம் உயரவும், அவர்கள் சொந்த காலில் நின்று உழைக்கவும் பால்பண்ணை ஒன்றை தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் அமைத்து கொடுத்துள்ளது.
தஞ்சாவூரை சேர்ந்த திருநங்கைகளின் ஒருங்கிணைப்பாளர் சத்யா உள்ளிட்ட ஐந்து பேர் பால் பண்ணை அமைத்து தரக்கோரி, தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தை நாடினர். அவர்களின் ஆர்வத்தை கண்ட மடத்தின் தலைவர் ஸ்ரீமத் விமூர்த்தானந்த மகராஜ் ஏற்பாட்டில், பாபநாசம் அருகே உதாரமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட கொத்தங்குடி கிராமத்தில் புஷ்பகலா, கவிதா ஆகியோர் தங்களது இடத்தில் திருநங்கைகளுக்கு மாடு வளர்க்க இடம் வழங்கினர். அதன்படி, ஏற்கெனவே ஒரு பசுமாடும், கன்றும் வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்த இடத்தில், மடத்தின் பக்தர் வெங்கடேசன் என்பவர் ஒரு லட்சம் மதிப்பீட்டில் மாட்டு கொட்டகை அமைத்து கொடுத்தார். மடத்தின் சார்பில் புதியதாக இரண்டு பசுவும், கன்றுகளும் வழங்கப்பட்டது. ஸ்ரீ சாரதாம்மா கோசாலை என்ற பெயரில் பால்பண்ணையாக மாறியது. இந்த பால்பண்ணையில் சிறப்பு பூஜைகள் நடத்தி செயல்பாட்டிற்கு வந்தது.