காளஹஸ்தி சிவன் கோயிலில் உற்சவமூர்த்திகளுக்கு லட்ச பில்வ அர்ச்சனை
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் 13.11 .2022 முதல் 22.11 .2022 வரை 10 நாட்கள் ஸ்ரீ ஞானபிரசூனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் உற்சவமூர்த்தி களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள அலங்காரம் மண்டபத்தில் லட்ச பில்வ அர்ச்சனை லட்ச குங்குமார்ச்சனையை கோயிலில் நடக்கும் நான்கு கால அபிஷேகங்களுக்கு பின்னர் ரூபாய் 200 கட்டணமாக செலுத்தி பக்தர்கள் டிக்கெட்களை பெறலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நாள் கோயில் வளாகத்தில் உள்ள அலங்காரம் மண்டபத்தில் லட்ச பில்வார்ச்சனை லட்ச குங்கும அர்ச்சனையை கோயில் வேத பண்டிதர்களால் நடத்தப்பட்டது .இதில் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தம்பதியினர் மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு தம்பதியினர் மற்றும் கோயில் அதிகாரிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வழக்கமாக ஆண்டுதோறும் இந்த சிறப்பு லட்ச பில்வார்ச்சனை குங்குமார்ச்சனை நடப்பது வழக்கம்.இந்நிலையில் இவ்வாண்டும் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் 10 நாட்கள் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோயில் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.