வெங்கலமுடை அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா
ADDED :1094 days ago
மேலுார்: மேலுார் அருகே கொட்டகுடியில் கற்குடைய, சின்ன, வெங்கலமுடை அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் இன்று குதிரை பொட்டலில் இருந்து மந்தைக்கு புரவிகள் கொண்டு செல்லப்பட்டது. இரண்டாம் நாள் ஆன நாளை (நவ.16) மந்தையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள கோயிலுக்கு புரவிகள் கொண்டு செல்லப்பட்டு கிடா வெட்டி பொங்கல வைக்கப்படும். குழந்தை வரம் வேண்டி கிடைக்கப்பெற்றவர்கள் பதுமைகளையும், நாகம் உள்ளிட்ட சிலைகளை சுமந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.மழை பெய்து எல்லா வளமும் கிடைக்கவும், நோய் நொடியில்லாமல் வாழ புரவி எடுப்பு திருவிழா கொண்டாடப்படுவதாக கிராமத்தினர் தெரிவித்தனர். இத் திருவிழாவில் கொட்டகுடி, அரசப்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.