மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்ச தீபம்: டிச.,6ல் கோலாகலம்
ADDED :1095 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற உள்ள திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு டிச., 6ல் லட்ச தீபங்கள் ஏற்றப்படவுள்ளன. இக்கோவிலில் திருக்கார்த்திகை விழா கொடியேற்றம் டிச., 1 காலை 10:30 மணி முதல் 10:54 மணிக்குள் நடக்கிறது. டிச.,10 வரை நடக்கும் விழாவில் தினமும் காலை, மாலை பஞ்சமூர்த்திகளுடன் அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் ஆடி வீதியில் உலா வருவர். டிச., 6ல் கோவிலில் லட்ச தீபங்கள் ஏற்றப்படும். அன்று இரவு 7:00 மணிக்குள் அம்மனும், சுவாமியும் கீழ மாசி வீதி தேரடி அருகில் நடக்கும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் எழுந்தருளுவர். ஏற்பாடுகளை, தக்கார் கருமுத்து கண்ணன், கோவில் துணை கமிஷனர் அருணாசலம் செய்கின்றனர்.