உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிலம்பணி முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சிலம்பணி முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தேவகோட்டை: தேவகோட்டை சிலம்பணி வெள்ளாளர் தெருவில் உள்ள சிலம்பணி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஸ்தானிகர் ரவி, கருப்பு தலைமையில் சிவாச்சாரியார்களின் இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து சக்தி விநாயகர், சிவசுப்பிரமணியர் சுவாமிகள், சிலம்பணி முத்து மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து. அம்மனுக்கு மகா அபிஷேகம் சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், துணை தலைவர் ரமேஷ், குமார், ஆவின் தலைவர் அசோகன், கவுன்சிலர்கள், கோவில் நிர்வாகிகளும், கும்பாபிஷேகம் நிர்வாகிகளும் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். குமார் தலைமையில் பட்டிமன்றம் நடைப்பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !