உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை வீரன் பட்டத்தரசி அம்மன் உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்

மதுரை வீரன் பட்டத்தரசி அம்மன் உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்

அவிநாசி: அவிநாசி அடுத்த இராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள மதுரைவீரன், பட்டத்தரசி அம்மன், தன்னாசியப்பன் உள்ளிட்ட பரிகார மூர்த்தி கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 11ம் தேதி 50க்கும் மேற்பட்ட பெண்கள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அதனைத் தொடர்ந்து முதல் கால யாக பூஜையாக கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பூமாதேவி வழிபாடு உள்ளிட்ட ஹோம பூஜைகள் நடைபெற்றது. அதனையடுத்து நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜையாக புண்யாஹவாசனம், மஹாபூர்ணாகுதி உள்ளிட்ட ஹோமங்கள் நிறைவில்,மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன், தன்னாசியப்பன் உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !