அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்
ADDED :1164 days ago
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ தர்மசாஸ்தா காசி யாத்திரை குழு சார்பில் கடந்த மாதம் 300ம் மேற்பட்ட பக்தர்கள் கேதார நாதர் கோவிலுக்கு சென்று வந்தனர்.கேதாரநாதர் கோவிலில் மகா ருத்ர யாகம் ஸ்ரீ தர்மசாஸ்தா காசி யாத்திரை குழு சார்பில் நடைபெற்றது. அதன் பின்னர் அங்கிருந்து கொண்டு வரப்பட்ட கெளரி கங்கா தீர்த்தத்தை கொண்டு 108 வலம்புரி சங்காபிஷேகம் மற்றும் ருத்திர யாகம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. மேலும் லிங்கேஸ்வரர் சன்னதியிலும், அம்பாள் சன்னதியிலும் மலர்ப்பந்தல் அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.