உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் காஞ்சி மடத்தில் மருத்துவ முகாம்

ராமேஸ்வரம் காஞ்சி மடத்தில் மருத்துவ முகாம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் நடந்த இலவச பொது மற்றும் கண் பரிசோதனை மருத்துவ முகாமில் பலர் பங்கேற்றனர்.

ராமேஸ்வரம் காஞ்சி சங்கர மடம், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து ராமேஸ்வரத்தில் நேற்று இலவச பொது மற்றும் கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடந்தது. இதில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் பார்வை குறைபாடுகள் உள்ள நோயாளிகள் உள்ளிட்ட பிற நோய்கள் குறித்து நூறுக்கு மேலான நோயாளிகளுக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து இலவசமாக மருந்துகள், மூக்கு கண்ணாடிகளை வழங்கினர். மேலும் கண் ஆபரேஷன் செய்ய வேண்டிய நோயாளிகளை மதுரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உள்ளனர். இம்முகாம் ஏற்பாடுகளை ராமேஸ்வரம் காஞ்சி சங்கர மடம் மேலாளர் ஆடிட்டர் சுந்தரம் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !