வட்டமலை ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்
அன்னூர்: குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் கோவில் பழமையானது. இக்கோவில் வளாகத்தில், வற்றாத சுனை உள்ளது. இங்கு முன் மண்டபம் மற்றும் கோபுரம் கட்டுதல், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்தல் ஆகிய திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா நேற்று மாலை தேவதா அணுக்ஞையுடன் துவங்கியது. துவக்க நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை கணபதி ஹோமமும், மாலையில் வாஸ்து சாந்தியும் நடக்கிறது. 17ம் தேதி சாந்தி ஹோமமும், விநாயகர் வழிபாடும் நடைபெறுகிறது. 18ம் தேதி மாலை முதற்கால யாக பூஜை நடக்கிறது. 19ம் தேதி காலையில் இரண்டாம் கால யாக பூஜையும், கோபுர கலசம் நிறுவுதலும், மாலையில் மூன்றாம் கால பூஜையும் நடக்கிறது. 20 ம் தேதி காலை 9:30 மணிக்கு, விநாயகர், கோபுரம், வட்டமலை ஆண்டவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. மகா அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 7:00 மணிக்கு சுவாமி திரு வீதி உலாவும், வள்ளி கும்மி ஆட்டமும் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை, பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவையாதீனம் குமரகுருபர அடிகள் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர்.