உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலாம் : கார்த்திகை மாத பலன்

துலாம் : கார்த்திகை மாத பலன்

சித்திரை  3, 4:
செயலாற்றல் அதிகம் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் தனாதிபதி சுக்கிரனால் பணவரவு இருக்கும். தடைபட்ட காரியம் சாதகமாக முடியும். வீண் குழப்பங்களை ஏற்படுத்தினாலும் முடிவில் தெளிவு  உண்டாகும். தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம். சொன்ன வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டியிருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். வீண் கனவுகள் தோன்றும். பேச்சில்  கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம் பேசும் போது நிதானம் அவசியம். தொழிலின் எதிர்காலம் குறித்த எண்ணம் மேலோங்கும். பணியாளர்கள்  சின்ன விஷயத்திற்கும் கூட அலைய நேரிடும்.  பணிச்சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு சரியாகும். உடல்நலனில் கவனம்  தேவை. கணவன், மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். உங்கள் செயல்களை குடும்பத்தினர்கள் குற்றம் சொல்லலாம். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பிள்ளைகளின் எதிர்கால நலனில்  ஆர்வம் காட்டுவீர்கள். பெண்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவர். மற்றவர் பிரச்னையில் தலையிட வேண்டாம். மாணவர்கள் நிதானத்தை கடைப்பிடிப்பது வெற்றிக்கு உதவும். பாடங்களை கூடுதல்  கவனத்துடன் படிப்பது நல்லது.
பரிகாரம்: பிரத்யங்கிரா தேவி வழிபாடு குடும்ப அமைதிக்கு உதவும்.
சந்திராஷ்டமம்: டிச.6
அதிர்ஷ்ட நாள்: நவ.17,18, டிச. 15

சுவாதி:
கடின உழைப்பின் மூலம் உன்னத நிலையை அடைவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். பணம் வரும் வாய்ப்பு உண்டு. எதிரிகள் விலகுவர். நீண்ட நாள் கஷ்டம் நீங்கும். நட்சத்திர நாதன் ராகுவின்  சஞ்சாரம் பல வழிகளில் நன்மை செய்யும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். வேண்டியவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். தொழில்,  வியாபாரத்தில் நிர்வாகச் செலவு அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக வெளியூர் அலைய நேரிடும். பணியாளர்கள்  கூடுதல் நேரம் பாடுபடுவர். பணிமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் திடீர் பிரச்னை ஏற்படலாம்  குடும்பச் செலவு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.  வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்கள் குடும்ப நலனில் கவனம் செலுத்துவர். வீட்டுச் செலவு அதிகரிக்கும். கலைத்துறையினர்  ஓய்வில்லாமல் உழைக்க நேரிட்டாலும் கூடுதல் வருமானம் வரும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பழைய பாக்கி வசூலாகும். உடலில் இருந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும். அரசியல்வாதிகள்  தலைமையிடம்  எச்சரிக்கையாக பழகுவது நல்லது. மாணவர்கள் படிப்புக்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது.
பரிகாரம்: அனுமன் வழிபட மனோபலம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: டிச.7, 8
அதிர்ஷ்ட நாள்: நவ.18, 19

விசாகம்  1, 2, 3
எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடும் உங்களுக்கு இந்த மாதம் பணவரவு கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். குரு சஞ்சாரத்தால் வீண் கவலை, வாக்குவாதம் நீங்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.  எதிர்ப்பு அகலும். நீண்ட நாளாக இழுப்பறியாக இருந்த பிரச்னை தீரும். தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும். அரசு விஷயங்களில்   சாதகமாக பலன் கிடைக்கும். வியாபாரம், தொழில் விரிவாக்கம்  பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி நிலைமை உயரும். பணியாளர்கள்  கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பர். கஷ்டமில்லாத சுகவாழ்க்கை உண்டாகும். திருமண முயற்சியில்   இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை,  ஆபரணம் சேரும். விருந்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் கூடும்.  பெண்களுக்கு  இழுபறியாக இருந்த  பிரச்னைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். பணவரவு கூடும். கலைத்துறையினருக்கு எதிர்பார்ப்பு தடையின்றி நிறைவேறும். தொந்தரவு கொடுத்த நோய் விலகும். உபரி வருவாயால் கடன் அடைபடும்.   அரசியல்வாதிகளுக்கு  புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சி ஏற்படும். கடினமான வேலைகளையும் எளிதாக  செய்து முடிப்பர். விளையாட்டில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.
பரிகாரம்: முருகனை வழிபட பணவரவு கூடும்.
சந்திராஷ்டமம்: டிச. 8, 9
அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 20


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !