உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருச்சிகம் : கார்த்திகை மாத பலன்

விருச்சிகம் : கார்த்திகை மாத பலன்

விசாகம் 4:
திட்டமிட்டு காரியங்களை செய்து வெற்றி காண்பீர்கள். இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்களது செயல்களுக்கு ஆதரவு கிடைக்கும்.  ஐந்தாம் ராசியில் குரு இருப்பதால் ஆரோக்கியத்தில் மேன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.  பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும்.  வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மாணவர்கள்  கல்வியில் முன்னேற்றம் காண்பர்.  நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கலைத்துறையினர் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவர்.  உபரி வருவாயால் கடன் அடைபடும். அரசியல்வாதிகளுக்கு  புதிய ஒப்பந்தங்கள்  கையெழுத்தாகும். எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வர்.
பரிகாரம்: வியாழனன்று  குருபகவானை வழிபட குழப்பம் தீரும்.
சந்திராஷ்டமம்:டிச. 8, 9
அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 20

அனுஷம்
இந்த மாதம் எதிலும் அவசரமாக செயல்படத் தோன்றும். நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் மனதில் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான  பிரச்னைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள்.  வாகன பயணத்தின் போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரவு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை  பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம். பணியாளர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி  செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. குடும்பத்தில் பிரச்னை தலைதுாக்கலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை  உண்டாகலாம் கவனம். உறவினர் வகையில் வருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடு நடக்கும்.  பெண்கள் சிக்கலான விஷயங்களை கூட சுமுகமாக முடித்து விடுவர்.  கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் குறித்த முடிவுகளை தீர ஆலோசித்து எடுப்பது நல்லது.  மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட கவலை தீரும்.
சந்திராஷ்டமம்: டிச. 9, 10
அதிர்ஷ்ட நாள்: நவ. 20, 21

கேட்டை
சுக்கிரன் சஞ்சாரத்தால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய  நபர்கள், எதிர்பாலினத்தினருடன் பேசும் போது கவனமாக இருப்பது நல்லது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில்  வேகம் காட்டுவர்.  ராசியில் சூரிய சஞ்சாரம் இருப்பதால் மறைமுகப் போட்டிகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பர். பணி  நிமித்தமாக அடிக்கடி அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் நிம்மதி கிடைக்கும். உறவினர்,  நண்பர்களிடம் இருந்த மனகசப்பு மாறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். பெண்கள் எதை பற்றியாவது நினைத்து கவலைப்படுவர். வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை.  கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகள்  சிறிய வேலையை முடிக்க கூடுதலாக உழைக்க நேரிடும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.  சக மாணவர்கள் மூலம்  உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: பவுர்ணமியன்று அம்மனை வழிபட நன்மை சேரும்.
சந்திராஷ்டமம்: டிச. 10, 11
அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 22


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !