உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகரம் : கார்த்திகை மாத பலன்

மகரம் : கார்த்திகை மாத பலன்

உத்திராடம்  2, 3, 4
எதையும் ஒருமுறை பார்த்தாலே கிரகிக்கும் திறமை உடைய உங்களுக்கு இந்த மாதம் நெருக்கடி நீங்கும். பணவரவு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்வீர்கள். பயணத்தால் நன்மை  உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர் மீது இரக்கம் ஏற்படும். நீண்ட நாளாக இருந்த பிரச்னை தீரும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். தொழில், வியாபாரத்தில்  லாபம் அதிகரிக்கும். பலவழிகளிலும் வருமானம் வரும். பணியாளர்கள் வேலைப்பளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். எதிர்பார்த்த பணி,  இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் குதுாகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர் மத்தியில் மதிப்பு  கூடும். சுபச்செலவு அதிகரிக்கும். பெண்கள் திட்டமிட்ட காரியங்களை செய்து முடித்து நிம்மதி காண்பர்.  அரசியல்வாதிகள் தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வர். மேலிடத்தின் கனிவான  பார்வையால் கோரிக்கை நிறைவேறும். கலைத்துறையினருக்கு பாராட்டும், பணமும் கிடைக்கும். மாணவர்கள் திட்டமிட்டு படித்து முன்னேறுவர். மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவம் நிகழும்.
பரிகாரம்: ஐயப்பனை வணங்கி வர சகல தோஷமும் நீங்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 13
அதிர்ஷ்ட நாள்: நவ. 24, 25

திருவோணம்
காரியத்தை கச்சிதமாக முடிக்கும் உங்களுக்கு இந்த மாதம் தடைபட்ட காரியங்களும்  நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பணப்பிரச்னை  தீரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும். பழைய பாக்கி வசூலாகும். நீண்ட நாளாக நடந்து முடியாத செயல் ஒன்று  நடக்கும். பணியாளர்களுக்கு திறமை வெளிப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு, சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்  குடும்பத்தில் சந்தோஷமான சூழல் காணப்படும். கணவன்,  மனைவிக்கிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசியல்வாதிகளின்  பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே இடையூறு வரலாம். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். பாராட்டும் கிடைக்கும்.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட பணவரவு அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: நவ.17, டிச.14
அதிர்ஷ்ட நாள்: நவ. 25, 26

அவிட்டம் - 1, 2
அநியாயத்தை எதிர்க்கும் குணமுடைய உங்களுக்கு இந்த மாதம் பேச்சு திறமையால் வெற்றி கிடைக்கும். ராசிநாதன் சனி ராசியில் இருந்தாலும் மற்ற கிரகங்களின் மூலமாக  சாதகமான பலன்  கிடைக்கும்.  மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம்  உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உறவினர்களுடன் தேவையற்ற  வாக்குவாதம் வரலாம். வாகனங்களால் செலவு ஏற்படும். நண்பர்களிடம் இருந்து தற்காலிகமாக விலக நேரிடலாம். உடல்சோர்வு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.  பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. பணியாளர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. பெண்கள் பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து  முடித்து வெற்றி காண்பர். அரசியல்வாதிகளுக்கு  நன்மை ஏற்பட்டாலும் மனக் கஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். கலைத்துறையினருக்கு கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் கவனமாக  இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் பரிசு கிடைக்கும்.
பரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு நிம்மதியளிக்கும்.
சந்திராஷ்டமம்:நவ.17, 18, டிச.15
அதிர்ஷ்ட நாள்: நவ. 26,27


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !