உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி மாரியம்மன் கோயில் காணிக்கை ரூ.19 லட்சம் வசூல்

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் காணிக்கை ரூ.19 லட்சம் வசூல்

சாத்தூர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், உண்டியல் காணிக்கையாக, 19 லட்சத்து 70 ஆயிரத்து 502 ரூபாய் கிடைத்தது. கோயிலில் உள்ள நான்கு உண்டியல்கள், நேற்று திறந்து எண்ணப்பட்டன. இந்து அறநிலைய உதவி ஆணையர் கவிதாபிரியதர்ஷனி, அறங்காவலர் குழுதலைவர் ராமமூர்த்தி பூசாரி, செயல்அலுவலர் தனபாலன் முன்னிலையில் நடந்த பணியில், மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள்,கோயில் பணியாளர்கள் ஈடுப்பட்டனர். காணிக்கையாக,19 லட்சத்து 70ஆயிரத்து 502 ரூபாய் ,75 கிராம் தங்கம் , 125 கிராம் வெள்ளி கிடைத்தது. இது 20 நாள் வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !