உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளகோவில் வீரக்குமார ஸ்வாமி கோவில் குதிரை வாகன கும்பாபிஷேகம்

வெள்ளகோவில் வீரக்குமார ஸ்வாமி கோவில் குதிரை வாகன கும்பாபிஷேகம்

வெள்ளகோவில்: வெள்ளகோவில் வீரக்குமார ஸ்வாமிக்கு இரண்டாம் ஆண்டுவிழா மற்றும் நூதன ஐம்பொன் குதிரை வாகனத்துக்கு, மஹா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.விழாவை முன்னிட்டு நேற்று காலை, 8.45 மணிக்கு மங்கள இசையுடன் தேவதாஅனுக்ஞை விக்னேஷ்வரா பூஜையுடன் துவங்கி புண்யாஹவாசனம்,பஞ்சகவ்யம்,ஸ்ரீ மஹாகணபதி ஹோமம்,நவக்கிரக ஹோமம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து காலை, 11 மணிக்கு செல்லாண்டியம்மன் கோவிலில் விசேஷ அபிஷேகம், கலசாபிஷேகம், விசேஷ சிறப்பு அலங்காரம், மதியம் 1 மணிக்கு மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 5.30 மணியளவில் வீரக்குமார ஸ்வாமி ஆலயத்தில் வாஸ்துசாந்தி, மிருஸ்தங்கிரகணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம், யாகபூஜை, இரவு 8 மணிக்கு நூதன ஐம்பொன் குதிரை வாகன கண்திறப்பு நடந்தது.இன்று அதிகாலை 4 மணிக்கு யாகபூஜை ஆரம்பம், 5 மணிக்கு கலசங்கள் புறப்பட்டு, பிரகார வலம் வருதல் நடக்கிறது. காலை, 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் ஐம்பொன் பஞ்சலோக குதிரை வாகனத்துக்கு மஹா கும்பாபிஷேகமும், 6 -7 மணிக்குள் வீரக்குமார ஸ்வாமிக்கு இரண்டாம் ஆண்டு சங்காபிஷேக விழாவும் நடக்கிறது.காலை 8 மணிக்கு மஹா தீபாராதனை, நடக்கிறது. காலை 8 மணிமுதல் அன்னதானம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் தக்கார் நடராஜன், செயல்அலுவலர் முத்துராமன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !