உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்சன பைரவருக்கு சிறப்பு பூஜை

தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்சன பைரவருக்கு சிறப்பு பூஜை

தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பரிவார மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு ஐந்து கால பூஜை நடைபெற்றது. சந்தனம், மஞ்சள், இளநீர், பால் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களை தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினார். பூக்களால் சிறப்பு பூஜை நடந்தது. திண்டுக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

* சுக்காம்பட்டி ஸ்ரீ வாஸ்தீஸ்வரர் ஆலயத்தில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கூடுதலான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !