உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோமவாரம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

சோமவாரம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது.

கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை தான் சோமவார விரதமாக கடைபிடிக்கப் படுகிறது. இந்த விரதம் தான் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம்பெற்றான். இந்த அளவிற்கு சோமவார விரதம் மிகவும் புகழ்பெற்றது.  கார்த்திகை மாத சோமவாரங்களில் ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு சிவாலயத்தில் சங்காபிஷேகம் செய்வார்கள். அதன்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, இன்று 1008 சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !