உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயில் அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை

காளஹஸ்தி சிவன் கோயில் அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை

ஸ்ரீகாளஹஸ்தி:  சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் நடத்தப்படும் நித்ய அன்னதானத் திட்டத்திற்காக ஸ்ரீ காளஹஸ்தி அடுத்துள்ள தொட்டம் பேடு மண்டலம் கனபர்த்தி கிராமத்தை சேர்ந்த முருகய்யா நாயுடு குடும்பத்தினர் ஒரு லட்சத்து 116 ரூபாய் கான காசோலையை அவர்களின் குடும்பத்தினர் பெயரில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு நன்கொடையாக கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு. தாரக சீனிவாசலுவிடம் வழங்கினர் .முன்னதாக இவர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர். ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் வேத பண்டிதர்களால் ஆசிர்வாதம் செய்யப்பட்டதோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !