உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

காளஹஸ்தி சிவன் கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள  ஸ்ரீ மேதா குரு தட்சிணாமூர்த்திக்கு 24/11/2022 வியாழக்கிழமை என்பதால் தக்ஷிணாமூர்த்தி சுவாமிக்கு பல்வேறு சுகந்த திரவங்களான பால் ,தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர் போன்றவற்றில் சாமிக்கு வைபவமாக சிறப்பு அபிஷேகம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு பலவித வாசனை மலர்களால்  அலங்கரித்தனர் . மேலும் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு 108 தீபங்கள் கொண்ட பர்வஆரத்தி, சக்ர ஹாரதி ,கும்பஆரத்தி ,மகா மங்கள ஆரத்திகளை சமர்ப்பித்தனர் .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ததோடு சுவாமியின் தீர்த்தப் பிரசாதங்களை பெற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !