சபரிமலை செல்ல வாடகைக்கு அரசு பஸ்கள்
ADDED :1064 days ago
சென்னை: கேரள மாநிலம் சபரி மலைக்கு குழுவாகச் செல்வோர், அரசு விரைவு பஸ்களை வாடகைக்கு எடுக்கும் வசதி உள்ளது. பக்தர்களில், 10க்கும் மேற்பட்டோர் குழுவாக முன்பதிவு செய்தால், அரசு விரைவு பஸ்களில், 10 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அதேபோல், 40 பேருக்கும் மேல் குழுவாகச் செல்ல முடிவு செய்தால், விரைவு சொகுசு பஸ்களை, குறைந்தவாடகைக்கு எடுத்துச் செல்லலாம். குழு பயணச் சீட்டுக்கு, www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் அல்லது விரைவு போக்குவரத்துக் கழக கிளைகளைஅணுகலாம். பஸ்களை வாடகைக்கு எடுக்க, 94450 14424 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தமிழக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.