காளஹஸ்தி சிவன் கோயிலில் கர்நாடகா எம். பி. உஜ்வல் ரேவண்ணா தரிசனம்
ADDED :1310 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் பாரத பிரதமர் தேவ கௌடா வின் பேரனும் தற்போதைய கர்நாடகா மாநில ஹசன் தொகுதி எம். பி.யுமான உஜ்வல் ரேவண்ணா குடும்பத்தா ரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு கோயிலுக்குள் சென்றவர்கள் சிறப்பு ராகு கேது பூஜையில் ஈடுபட்டனர் .தொடர்ந்து ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர் மேலும் வேத பண்டிதர்களால் சிறப்பு ஆசிர்வாதம் செய்யப்பட்டன.