காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை
ADDED :1201 days ago
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகர் கோவிலில் நடக்கும் நித்ய அன்னதானத் திட்டத்திற்காக ஒரு லட்சத்து 116 ரூபாயை நன்கொடையாக திருப்பதியை சேர்ந்த மல்லிகார்ஜுன ரெட்டி குடும்பத்தினர் கோயில் துணை நிர்வாக அதிகாரி வித்யாசாகர் ரெட்டியிடம் வழங்கினார். முன்னதாக இவர்களுக்கு சிறப்பு தரிசனம் ஏற்பாடுகளை கோயில் சார்பில் செய்யப்பட்டது. கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர் தொடர்ந்து அவர்களுக்கு கோயில் தீர்த்த பிரசாதங்களை கோயில் அதிகாரிகள் வழங்கினர்.