திருப்புத்தூரில் நாளை சம்பக சஷ்டி விழா நிறைவு
ADDED :1050 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் மற்றும் ந.வைரவன்பட்டி கோயில்களில் நாளை சம்பக சஷ்டி விழா நிறைவடைகிறது. திருத்தளிநாதர் கோயிலில் அஷ்ட பைரவர் யாகம், வளரொளிநாதர், வயிரவ சுவாமி கோயிலில் சூரசம்ஹாரமும் நாளை நடைபெறும். திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா நவ.24 ல் துவங்கி தினசரி இரு கால அஷ்ட பைரவர் யாகம் நடக்கிறது. காலை 10:00 மணி, மாலை 5:00 மணிஅளவில் யாகசாலை பூஜைகள் துவங்கி சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. நாளை மாலை 12ம் கால யாகசாலை பூஜையுடன் நிறைவடைகிறது. வளரொளிநாதர் கோயில் வயிரவ சுவாமிக்கு தினசரி மாலை அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை வழிபாடு நடக்கிறது. இன்று சுவாமி விடுதிக்கு எழுந்தருளி சாயரட்சை பூஜைகள் நடக்கும். நாளை இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, சூரசம்ஹாரம் நடைபெறும்.