காஞ்சி மகா சங்கராச்சாரியார் ஆராதனை மகோத்ஸவம்
சென்னை :காஞ்சி காமகோடி பீடத்தின், 68வது பீடாதிபதியான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 29வது முக்தி ஆராதனை மூன்று நாள் மஹோத்ஸவம்,டிச., 18ம் தேதிதுவங்குகிறது.
காஞ்சி காமகோடி பீடத்தின், 68வது பீடாதிபதி, சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகள். அவரின், 29வது முக்தி ஆராதனை மஹோத்ஸவம் டிச., 20ம் தேதி வருகிறது. அதை முன்னிட்டு, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாணைப்படி ஆராதனை விழா, டிச., 18 முதல் மூன்று நாட்கள், காஞ்சி, ஸ்ரீமடம் பிருந்தாவனத்தில் நடக்கின்றன.இதில், வேதபாராயணம்,வித்வத் சதஸ்,உபன்யாசங்கள், நாமசங்கீர்த்தனங்கள், சங்கீதாஞ்சலி உள்ளிட்டவை நடக்கின்றன. ஆராதனை தினமான,20ம் தேதி ஸ்ரீருத்ரபாராயணம், ஹோமம், பிருந்தாவனத்தில் விசேஷ பூஜைகள், அபிஷேகம், அலங்காரம், பஞ்சரத்ன கீர்த்தனை கோஷ்டிகானமும் நடக்கின்றன. கொவ்வூரில் ஆராதனா மஹோத்ஸவம்: ஆந்திர பிரதேசம் ராஜமுந்திரி அடுத்துள்ளது, கொவ்வூர். இங்கு, கவுதம மகரிஷி ஆஸ்ரமம் உள்ளது. காஞ்சி மகா பெரியவர் அங்கு, 1937, 1967ல் விஜயம் செய்துள்ளார்.விஜயேந்திர சரஸ்வதிசுவாமிகள், டிச., 17முதல் கொவ்வூரில் முகாமிட உள்ளார்.இதையடுத்து, மகா பெரியவரின், 29வது ஆராதனா மஹாத்ஸவம், கொவ்வூரிலும் நடத்தப்படுகிறது.