திருப்பரங்குன்றம் கோயில் பித்தளை கதவுகளுக்கு பாலீஷ்
ADDED :1136 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவ. 28ல் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு மகா மண்டபத்திலிருந்து மூலஸ்தானம் செல்லும் வாசலில் அமைக்கப்பட்டுள்ள பித்தளை தகடுகள் உட்பட கோயிலில் உள்ள அனைத்து பித்தளை கதவுகள், நிலைகளிலுள்ள பித்தளை தகடுகளுக்கும் பாலிஷ் போடப்பட்டு புது பொலிவுடன் காட்சியளிக்கிறது.